இது 3து வாரம் . இன்னிக்கும் எங்க வீட்ல வழக்கம் போல அம்மா எழுப்ப , அப்பா திட்ட லேட்டா தங்க எழுந்தேன் . சரி குளிச்சி முடிச்சி , டிரஸ் போட்டு . சர்ச்கு சீக்கிரமா போய்டேன் .என்னடா இவன் லேட்டா எழுந்தென்றான் அனா சீக்கிரமா போய்ட்டானு சொல்றான் பாக்குறீங்கள . எங்க வீட்டுக்கு அது லேட்டு . ஆனா ஒண்ணுங்க சர்ச்லையே நாங்க தான் பாஸ்ட்ஆ போவோம் . அன்னைக்கும் எப்படா பைபிள் study தொடங்கும்னு காத்துட்டூ இருப்பேன் . பைபிள் study ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் அமைதி . திடிர்னு ஒரு முஸ்லிம் setup ஒரு பொண்ணு ( angel )
உத்து பாத்தா அட என் உயிர்ங்க .
சரி அப்ப ஜஸ்ட் ஒரு அட்ட்ராக்சன் தானேன்னு நெனச்சேன் . நேரம் போயிட்டு இருந்தது அவ என் முன்னாடி இருந்தா . கொஞ்சம் நேரத்துல அதாவது ஒரு 50 செகண்ட்ல கிருஷ்ணா நீ மாலினி புதுசு அவளுக்கு jesus , மோசே , ஸ்டோரி சொல்லுனாங்க . ஐயோ அம்மா என்னால முடியிலங்க . ஒரு பொண்ணு சுலபமா வந்து பேசிடுவா .ஆனா நாம அப்படியா
அப்பத்தான் ஒரு புது பொண்ணு மாதிரி வெட்கப்படுவோம் .
சரி அதெல்லாம் தாண்டி அவகிட்ட எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொன்னேன் .இதுல என்ன ஒரு காமெடினா எனக்கே இதபத்தி கொஞ்சம் தான் தெரியும் . இருந்தாலும் எனக்கு தெரிஞ்சது தவிர தெரியாததையும் சொன்னேன் .
கடைசியா அவ என்கிட்டே ரொம்ப தேங்க்ஸ் எனக்கு சொல்லி இவ்வளவு கொடுதுட்ட . இதல்லம் உனக்கு எப்படி தெரியும் ? நீ இதெல்லாம் படிச்சியாநு கேட்டா .
சரி இப்ப கண்டிப்பா பில்டப் பண்ணியே ஆகணும் . இல்ல எங்க குடும்பமே கிறிஸ்டியன் . எனக்கு இதல்லாம் கண்டிப்பா தெரிஞ்சே இருக்கணும் . இதென்ன பைபிள் ல உனக்கு எந்த ஸ்டோரி வேணும் சொல்லு சொல்றேன் நு சொன்னான் . என்னடா இவனுக்கே ஏதும் தெரியாது சொல்றான் ஆனா இன்னும் கேளுன்றாநேனு பாக்குறீங்களா . அப்பதானே இன்னும் கொஞ்சம் நேரம் என் கூட இருப்பா அதான் .
பரவால இப்ப வேண்டாம் சர்ச் முடிஞ்சிடுச்சி அடுத்த வரம் சொல்லுநு சொன்னா .
பைபிள் study க்ளோசிங் பிரேயர் முடிந்தது . மறு படியும் போன வாரத்தை போல என் கிட்ட vanthu samaathanam சொன்னா. இப்ப உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்ல போறேன் . சாரி நான் அடுத்த page சொல்றேனே .